இந்த நைட் ஷிப்ட் வேலைக்கு போறவனுக்கு எப்பவுமே மத்தியானம் தான் விடியும். எங்க தொடங்கும் , வழக்கம் போல ஆண்ட்ராய்ட் போன்தான். சண்டை போட்டு அண்ணன்கிட்ட வாங்குன பொம்மை எங்க இருக்குனு தூங்கி எழுந்த உடனே தேடுற குட்டி பாப்பா போல தேடும் மனசு.
Facebook , whatsapp , messenger, மெசேஜ் வருதோ இல்லையோ ஒருதடவை திறந்து பாத்துடணும். சரி கதைக்குள்ள வருவோம். அப்படி பாத்துட்டு இருந்த அப்போதான் நீங்க இன்னைக்கு வெங்கடேஷ் பேசுற நிகழ்ச்சிக்கு போறேன்னு போட்டு இருக்கீங்க, கிளம்புங்க என பொண்டாட்டி போல ஒரு நோடிபிக்கேஷன் வந்தது. வண்டி எடுத்துட்டு கிளம்பும் போது வழக்கமா சாயா குடிக்கிற கடைல கிண்டிக்கு அந்த பக்கம் மழைன்னு ஒருத்தன் கத்துறான் ரேடியோவில், சரி நம்ம வெங்கடேஷ் சார் பேசுனா இடி போல அதிரும், இதென்ன மழை பாத்துக்கலாம் அப்டின்னு கிளம்பியாச்சு.அப்புறம் மழை என்றால் கேரளாக்காரன் தான் பயப்படனும். நாம என்னைக்கோ பாக்குறோம், கொஞ்சம் நம்ம மேலயும் படட்டுமே.
மயிலாப்பூர் தாண்டி ஆர்க்கே கான்வென்ஷன் சென்டர் போயாச்சு. உள்ள போன உடனே வெங்கடேஷ் சார் என்ன ராஜா மழையா என்றார். ஆமா சார் மழைதான் நான் வந்த உடனே நின்னுடுச்சு அப்டின்னு சொல்லிபோட்டு இடம் தேடி வேலுதரன் சார் பக்கம் உட்காந்துட்டேன்.
திடீர்னு ஒரு சர்ப்ரைஸ், எப்பவாச்சும் காட்சி தரும் சுவேதா அக்கா. என்ன இது மூலவர், உற்சவரா மாறி இந்த பக்கம் வந்துருக்கார் அப்டின்னு யோசிச்சா, டேய் நான்தான் வரேன் போட்டு இருந்தேனே பாக்கலை என்றார். ம்ம் என்று முடிக்க ஆரம்பித்தார் வெங்கடேஷ் சார், வெடித்தார்னு கூட சொல்லலாம்.
என்னடா இது நாலு வரி மணப்பாடம் பண்ணி அதை ஒரு பொண்ணு கிட்ட சொல்லவே கண்ணை கட்டுது, இவர் எப்படி எல்லாம் ஞாபகம் வச்சுருக்கார் என யோசிக்க தோணும் அவரை பார்க்கும் போது. அதிலும் அவர் sense of humour இருக்கிறதே , கண்டிப்பா பள்ளி கல்லூரில எல்லா பொண்ணுங்களும் இவரை சுத்திதான் இருந்து இருக்கணும்.
இடிமழையில் சில துளிகள்
நாற்பதுகளின் ஆரம்பமே நெருப்புடா என தான் ஆரம்பிச்சுருக்கு, அதுல முக்கியமானது இந்தியன் எக்பிரஸ் ஆங்கில பத்திரிக்கை அலுவலகம் தான். முழுசும் எரிஞ்சு போச்சு, ஆனா மூனே நாளில் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு மாதிரி வந்துட்டானுங்க, எப்படி, அதான் நம்ம தி ஹிந்து இருக்கே அவங்க இடம் கொடுத்து அங்கையே பத்திரிக்கை நடத்த சொல்லிருக்காங்க, இப்போ எல்லாம் நினைச்சு கூட பாக்க முடியாது, பக்கத்து வீட்டுக்காரனே தண்ணி தர மாட்டான்.
காந்தியை பத்தி படம் எடுத்து அப்போவே வெளியிட்டு இருக்கார் ஏ.கே செட்டியார்.வெள்ளைக்காரன் அப்போவே அதை சென்சாரும் பண்ணிருக்கான்.
அடுத்து நம்ம பாரி, நம்ம மக்களுக்கு பாரிஸ் கார்னர் தெரியாம இருக்க வாய்ப்பே இல்லை. இந்த பாரி பண்ணாத பிசினஸ் ஏதும் இருக்கானு தேடனும். அதை விட முக்கியமான மேட்டர் ஒண்ணு இருக்கு. அது அவரோட உயில். நான் இறந்து ஒன்பது மாதங்களில் பிறக்கும் குழந்தைக்கு மட்டுமே என்னோட சொத்துக்களில் பங்கு இருக்கிறது என்பது தான் அது. அடேங்கப்பா என்னா விவரம்.
கல்கி வாசன் தொடர்பு, ஜின்னா நம்ம ஊருக்கு வந்து திராவிடஸ்தானை நான் ஆதரிக்கிறேன் என சொன்னது, எம் எஸ் திருமணம், கல்கி பிறந்த கதை, இந்திய சுதந்திரம், ராஜாஜி பற்றி மேலும் பல தகவல்கள் என நீளும் அந்த பெருமழை.
கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லி முடிக்கிறேன்( இப்படி சொல்வதே உலக வழக்கம் ).
அது பெரியாரின் திருமணம். ராஜேந்திர சோழனின் மகள் திருமணத்திற்கு பிறகு மிகவும் முக்கியமான பல திருப்பங்களையும் குழப்பங்களையும், உருவாக்கிய திருமணம் என்றால் அது பெரியாரின் திருமணம் தான். அந்த திருமணத்தில் பிறந்தது தான் திமுக. இது போல உவமைகளை சிலரால் மட்டுமே கையாள முடியும்.
ஒருமணி நேரமே ஒதுக்கப்பட்ட பேச்சு இரண்டு மணி நேரம் தொட்டது. யாரும் அசையவில்லை முழுதும் முடியும் வரை.
மழை ஓய்ந்தது.
மழை ஓய்ந்தது.
அப்புறம் என்ன வூட்டுக்கு போயி தூங்கியாச்சு.
நன்றி வணக்கம்.
![]() |
| வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் |

No comments:
Post a Comment