Friday, 4 August 2017

சதுரங்கப்பட்டினம்

மெட்ராஸ் தெரியும் சட்ராஸ் தெரியுமா ??


சென்னைக்கு தெற்கே கல்பாக்கம் அருகே உள்ள கடற்கரை நகரம் தான் சதுரங்கப்பட்டினம். வரலாற்று தகவலின் படி 14 நூற்றாண்டு கல்வெட்டு இங்கு கிடைத்துள்ளது. அப்போது இதன் பெயர் ராஜநாராயணன் பட்டினம். அப்போதே வணிகர்கள் நகரமாக இருந்துள்ளது.

16ம் நூற்றாண்டில்  டச்சுக்காரர்கள் இங்கு வந்து கோட்டை கொத்தளங்களை அமைத்தனர். அவர்களின் முக்கிய வணிக நகரமாக இருந்தது சடராஸ்.

கோட்டைக்குள் செல்லலாம் !!

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதில்சுவர்கள் பீரங்கிகளுடன் நம்மை கம்பீரமாக வரவேற்கும்.

இந்த கோட்டையானது மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். இதன் நான்கு சுவர்களின் முனைகளில் எதிரிகளை மூன்று பக்கமும் நின்று தாக்கும் படி அமைக்க பட்டிருக்கும்.பருத்தி உடைகள் முத்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன .

கோட்டையில் மேல்மாடியில் நின்று கடலை பார்க்கும் போது உடைந்து போன குட்டி சுவரில் இருந்து பார்க்கும் போது இவ்வளவு அழகாக இருக்கிறதே! முழு கோட்டையின் மேல்மாடியில்!! என தோன்றும்.

கோட்டையின் உள்ளே சில கல்லறைகள் உள்ளன. ஒவ்வொரு கல்லறை மேலும் ஒரு அழகிய சின்னத்தை காணலாம்.

பின்னர் இந்த கோட்டை கிழக்கு இந்திய கம்பெனியால் கைப்பற்றப்பட்டது. தற்போது மிச்சம் மீதிகளே வரலாற்றின் எச்சங்களாக டச்சுக்காரர்களின் பெயர் சொல்ல நிற்கிறது.

king
கோட்டையின் முன்னாள் இருக்கும் பீரங்கி மற்றும் சுற்றுச்சுவர்.
கோட்டையின் உள்பக்கம் இருந்து எடுக்கப்பட்ட படம்.
கல்லறை மேல் காணப்படும்  அழகிய கப்பல் முத்திரை 



1 comment:

  1. இத்தகைய அழகிய கோட்டையை செப்பனிட்டு பராமரிப்பு செய்து வந்தால் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும். கோட்டையின் உள்ளேயும் வெளியேயும் நிழல் தரும் மரங்களை நட்டு பராமரித்தால் வெயிலின் கொடுமை குறையுமே ஏன் தொல்லியல் துறை இதனை செய்யக்கூடாது?

    ReplyDelete

தும்பல்

பேளூர் அடுத்து நாங்கள் சென்ற இடம் தும்பல். கல்ராயன் மலையின் கிழக்கு பக்கத்தில்  அமைந்துள்ள ஊர் தும்பல்.  அங்கே உள்ள அரசு மருத்துவமனைக்கு அர...